search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் எந்திரங்கள்
    X

    விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் எந்திரங்கள்

    • அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
    • வேளாண் பொறியியல் துறை சார்பில் நடந்தது

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் விவசாயி களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து குமரி மாவட்டத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வேளாண் பொறியியல் துறை சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

    தமிழ்நாடு பால்வளத்து றை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கூறியதா வது:-

    தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தியையும், விவசாயி களின் நிகர வருமானத்தையும் அதிகரித்திட வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் எந்திர மயமாக்குதல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்கு றை நிவர்த்தி செய்யப்படு வதோடு, குறித்த காலத்தில் பயிர் சாகுபடி மேற்கொள்ளவும் வழிவகுக்கப்படுகிறது. நடப்பு 2023-24-ம் நிதியாண்டில், வேளாண்மை நிதி நிலை அறிக்கை 2023-24-ன் படி, சிறு, குறு விவசாயிகள் சிறிய வேளாண் எந்திரங்கள் மானியத்தில் பெற்று பயன்பெறும் நோக்கத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்ட கிராமங்களுக்கு 5 ஆயிரம் பவர் டில்லர்கள், விசை களையெடுப்பான் கருவிகள் ரூ.41.23 கோடி மானியத்தில் வழங்க இலக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 27 பவர் டில்லர்கள் மற்றும் 13 விசை களை எடுப்பான் கருவிகள் ஆக மொத்தம் 40 எண்கள் விவசாயிகளுக்கு சுமார் ரூ.27.94 லட்சம் மானியத்தில் வழங்கப்படு கிறது. மேலும் உழவன் செயலி வாயிலாகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் விவசா யிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டத்தில், 50 சதவிகித மானிய அடிப்படையில் அதிகபட்சமாக பவர் டில்லர்களுக்கு ரூ.85 ஆயிரம், விசை களை எடுப்பான்களுக்கு ரூ.63 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

    மேலும் ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பை சார்ந்த சிறு, குறு விவசா யிகளுக்கு அவர்களின் பங்களிப்பு தொகையினை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன், 20 சதவீத கூடுதல் மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்ப டுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    விஜய் வசந்த் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், பிரின்ஸ் எம்.எல்.ஏ., வேளாண்மை பொறியியல் துறை, செயற்பொறியாளர் சில்வெஸ்டர் சொர்ணலதா, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா, நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×