search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    95 ஊராட்சிகளிலும் கண்ணாடி இழை கேபிள் அமைப்பதற்கான சர்வே நிறைவு : அமைச்சர் மனோதங்கராஜ் தகவல்
    X

    95 ஊராட்சிகளிலும் கண்ணாடி இழை கேபிள் அமைப்பதற்கான சர்வே நிறைவு : அமைச்சர் மனோதங்கராஜ் தகவல்

    • 189 கி.மீ பூமிக்கு அடியிலும் 320 கி.மீ மின் கம்பம் வழியாகவும் கண்ணாடி இழை கேபிள் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.
    • கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப் பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திட்ட தலைமை ஐடிஐ மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் தமிழ்நாடு கண்ணாடி இழைவலைய மைப்பு நிறுவன திட்டம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:-

    பாரத்நெட் பேஸ் 2 திட்டத்தின் மூலம் தமிழ்நாட் டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளையும் தமிழ் நெட் திட்டத்தின் மூலம் 1ஜிபிபிஎஸ் அதிவேகஅலை கற்றை வழியாக இணைத்திட தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் ஏபி சிடி என நான்கு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு டி தொகுப்பில் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் இடம் பெற்றுளளது. ஐடிஐ விமிடெட் பெங்களூரு நிறுவனத்திற்கு டி தொகுப்புக்கான வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகளிலும் கண்ணாடி இழை கேபிள் அமைக்கும் பணிக்கான சர்வே முடிவடைந்து உள்ளது. 189 கி.மீ பூமிக்கு அடியிலும் 320 கி.மீ மின் கம்பம் வழியாகவும் கண் ணாடி இழை கேபிள் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.

    ஒரு வருட காலத்தில் பணி முடிவடையும், குமரி மாவட்டத்தில் அதிக அளவில் மரங் அதிக அளவில் காற்று வீசுவதாலும் மின் கம்பம் மூலம் கேபிள் இணைக்கும் கிராமங்கள் குறித்த அறிக் கையினை முன்னதாக அளிக்கவும், தேவைப்பட டால் அவற்றை பூமிக்கு அடியில் மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

    மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் நிறுவனம் மற்றும் பாரத்சஞ்சார் நிகாம் லிட் நிறுவனங்களையும் இணைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துண்டிக்கப்ப டும் குடிநீர் இணைப்புகள் உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும் தெரிவிக்கப்பட்டது.

    இத்திட்டம் வருகிற 9-ந்தேதி தமிழக முதல்வ ரால் குமரி மாவட்டம் முத்தலக்குறிச்சி ஊராட்சி யிலும், திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சியிலும் காணொலி காட்சி வாயி லாக தொடங்கி வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப் பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திட்ட தலைமை ஐடிஐ மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×