search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்.கணேசபுரம் சாலையில் பைப் லைனுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய டாரஸ் லாரி
    X

    நாகர்.கணேசபுரம் சாலையில் பைப் லைனுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய டாரஸ் லாரி

    • லாரி நடுரோட்டில் சிக்கியதால் சாலையின் இருபுறமும் இருந்து கார் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
    • பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகர பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சாலைகளில் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    நாகர்கோவில் கணேச புரம் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பைப் லைன் அமைப்பதற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப் பட்டது. அதன் பிறகு அந்த பள்ளங்கள் மூடப்பட்டது. சாலையின் நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு மூடப்பட்டதால் சாலை புழுதியாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் செல்லும் போது காற்றில் புழுதிகள் பறப்பதால் பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த சம்பவம் கடந்த ஒரு வாரமாக தொடர்கதை யாகவே உள்ளது.

    இந்த நிலையில் பொட்டல் பகுதியில் இருந்து நாங்குநேரிக்கு டாரஸ் லாரியில் தும்பு ஏற்றிக்கொண்டு சென்ற டிரைவர் கணேசபுரம் சாலையில் லாரியை திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த சாலையில் பைப்லைனுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரியின் சக்கரங்கள் சிக்கியது. இதைத்தொடர்ந்து டிரைவர் லாரியை இயக்க முயன்றார். ஆனால் அந்த பள்ளதில் சக்கரம் பதிய தொடங்கியது. லாரி ஒருபுறம் சரியவே டிரைவர் லாரியை நிறுத்தினார்.

    லாரி நடுரோட்டில் சிக்கியதால் சாலையின் இருபுறமும் இருந்து கார் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தது. இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் மட்டுமே அந்த வழியாக வந்தனர். மற்றவர்கள் வாகனங்களை திருப்பி சென்றனர்.

    தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய லாரியை கிரைன் மூலமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1 மணி நேரத்திற்கு பிறகு அந்த லாரி கிரைன் மூலமாக மீட்கப்பட்டது. ஏற்கனவே அந்த சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில் டாரஸ் லாரி டிரைவர் அந்த வழியாக வந்துள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×