search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தளம் அருகே குழித்துறை கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன் உடைந்தது
    X

    புத்தளம் அருகே குழித்துறை கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன் உடைந்தது

    • சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு
    • லேசான அளவு தண்ணீர் வெளியேறியதால் பெரிதாக இதை யாரும் கண்டு கொள்ளவில்லை.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை சாலை பகுதிகளில் குழித்துறையில் இருந்து கன்னியாகுமரிக்கு தண்ணீர் கொண்டு செல்வ தற்காக ராட்சத பைப் லைன்கள் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் அவ்வப்போது பைப் லைன் கள் உடைந்து தண்ணீர் வீணாவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே சாலை களின் நடுவில் உள்ள பைப் லைனை மாற்றிவிட்டு இரும்பு பைப்லைன் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த நிலை யில் புத்தளம் சந்திப்பு பகுதி யில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட்டு குடிநீர் திட்ட தற்கான பைப் லைன் உடைந்து தண்ணீர் வெளி யேறியது. லேசான அளவு தண்ணீர் வெளியேறியதால் பெரிதாக இதை யாரும் கண்டு கொள்ளவில்லை.

    அந்த வழியாகத்தான் கனரக வாகனங்களும் சென்று வந்தன. இந்த நிலையில் இன்று காலை திடீரென பைப் லைனில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் புத்தளம் சந்திப்பு பகுதியில் சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. கூட்டுக்குடிநீர் திட்ட பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அந்த பைப் லைனில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

    சம்பந்தப்பட்ட ஊழி யரை தொடர்பு கொண்டு அந்த பைப் லைனில் தண்ணீரை நிறுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டது. பைப்லைனில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் ராட்சத பள்ளமும் ஏற்பட்டது. சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதையடுத்து அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள் ளது.

    இதனால் அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப் பட்டு உள்ளது. கூட்டுக் குடிநீர் பைப்லை னில் மிகப்பெரிய உடைப்பு ஏற் பட்டதையடுத்து தண்ணீர் விநியோகம் பாதிக்கப் பட்டுள்ளது.

    குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதை சீரமைப்ப தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக ராட்சத பைப்பு களை வெளியிடங்களில் இருந்து கொண்டு செல்ல வரவும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

    ஜே.சி.பி. எந்திரம் மூலமாக உடைப்பு ஏற்பட்ட பகுதியை தோண்டி சேத மடைந்த பைப் லைனை மாற்றிவிட்டு புதிதாக பைப்லைன்அமைக்க குடி நீர் வடிகால் வாரிய அதிகா ரிகள் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர். இன்று மாலை அல்லது நாளைக்குள் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதி காரிகள் தெரி வித்தனர். கூட்டுக்குடிநீர் திட்ட பைப் லைனை சரி செய்த பிறகு அந்த பகுதியில் சாலை சீரமைப்பு பணியை மேற் கொள்ளவும் நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் நட வடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×