search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் முக்கடலை வந்தடைந்தது
    X

    குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் முக்கடலை வந்தடைந்தது

    • சுத்திகரிக்கப்பட்டு இன்று வீடுகளுக்கு விநியோகம்
    • 6 மோட்டார்கள் மூலம் தண்ணீரை கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணை உள்ளது. இங்கிருந்து தான் வீடுகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோடை காலமான தற்போது முக்கடல் அணையில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வந்தது.

    இதனை கருத்தில் கொண்டு, மக்களின் குடிநீர் தேவைக்காக பேச்சிப்பாறை அல்லது பெருஞ்சாணி அணை களில் இருந்து முக்கடல் அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் வேண்டுகோள் விடுத்தார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பரிந்துரையின் பேரில் நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக கோதையாறு பாசன அணைகளில் இருந்து மே மாதம் 31-ந் தேதி வரை தினமும் 50 கன அடி தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று இரவு 10 மணிக்கு முக்கடல் அணையை வந்தடைந்தது.

    தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள், 6 மோட்டார்கள் மூலம் தண்ணீரை கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    அங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், இன்று காலை ஷிப்டு முறையில் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

    Next Story
    ×