search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திற்பரப்பு அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
    X

    திற்பரப்பு அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

    • பெருஞ்சாணியில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தம்
    • அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண் காணித்து வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு, மாம்ப ழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழி கின்றன. அணைகள் நிரம்பி வழிவதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண் காணித்து வருகிறார்கள்.

    அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணை யில் இருந்து தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வரு கிறது. அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப் பட்டு வருவதால் கோதை யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கோதை யாற்றின் கரையோர பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணை களில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டு உள்ளது. சிற்றாறு, பேச்சிப் பாறை அணைகளில் இருந்து மட்டும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் அளவும் குறைக்கப் பட்டு உள்ளதால் கோதை யாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சற்று குறைந் துள்ளது.

    திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு இன்று 8-வது நாளாக தடை விதிக்கப் பட்டுள்ளது. இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் இன்றி சுற்று லா பயணிகள் ஏராளமா னோர் திரண்டு இருந்தனர். அவர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற் றத்துடன் திரும்பி சென்ற னர். பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 43.98 அடியாக இருந்தது. அணைக்கு 426 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 301 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வும், 106 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.07 அடியாக உள்ளது. அணைக்கு 509 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 700 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வரு கிறது. சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 15.78 அடியாக உள்ளது. அணைக்கு 244 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 100 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 234 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வரு கிறது.

    Next Story
    ×