என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாகர்கோவில் பகுதியில் போலீசார் வாகன சோதனையால் வியாபாரிகளுக்கு பாதிப்பு
Byமாலை மலர்16 Aug 2022 2:59 PM IST
- எஸ்.பி. அலுவலகத்தில் மனு
- வணிக நிறுவனங்கள் இல்லாத பகுதியில் போலீசார் வாகன தணிக்கை செய்ய வேண்டும்.
நாகர்கோவில்:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை குமரி மாவட்ட தலைவர் டேவிட்சன் தலைமையில் நிர்வாகிகள் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் 65 கிளை சங்கங்களை கொண்டு எங்களது பேரவை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் வியாபாரம் நடக்கும் நேரத்தில் போலீசார் 4 முனைகளிலும் அரணாக நின்று வாகன தணிக்கை செய்கிறார்கள்.
இதனால் பொதுமக்கள் அச்சம் காரணமாக அந்த பகுதிக்கு வராமலேயே திரும்பி சென்று விடுகிறார்கள். கோடி கணக்கில் கடன் வாங்கி தொழில் செய்து வரும் வணிகர்களுக்கு இது பெரும் பாதிப்பாக உள்ளது. எனவே வணிக நிறுவனங்கள் இல்லாத பகுதியில் போலீசார் வாகன தணிக்கை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Next Story
×