search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வத்தக்காவிளை இசக்கியம்மன் கோவில் கொடை விழா
    X

    வத்தக்காவிளை இசக்கியம்மன் கோவில் கொடை விழா

    • நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜையும் நடைபெற உள்ளது.
    • கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குடும்ப வாரிசுதாரர்கள் செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    சூரங்குடி அருகே உள்ள வத்தக்காவிளை இசக்கியம்மன் கோவில் கொடை விழா நாளை (27-ந்தேதி) தொடங்கி 29-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி நாளை மாலை 5 மணிக்கு பக்தி காணமும், 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு நையாண்டி மேளமும், 9 மணிக்கு சாஸ்தா கதை வில்லிசையும், நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜையும் நடைபெற உள்ளது.

    நாளை மறுநாள் (28-ந்தேதி) காலை 5 மணிக்கு பக்தி காணமும், 8 மணிக்கு நையாண்டி மேளமும், 9 மணிக்கு இசக்கியம்மன் கதை வில்லிசையும், பகல் 1 மணிக்கு இசக்கியம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், 1.30 மணிக்கு அன்ன தானமும், மாலை 4 மணிக்கு பக்தி காணமும், மாலை 5 மணிக்கு நையாண்டி மேள மும், 6 மணிக்கு காலசுவாமி கதை வில்லிசையும், இரவு 7 மணிக்கு கால சுவாமிக்கு தீபாராதனையும், 8 மணிக்கு நையாண்டி மேளமும், 9 மணிக்கு வில்லிசையும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், நடைபெற உள்ளது.

    விழாவின் 3-ம் நாளான 29-ந்தேதி காலை 6 மணிக்கு சுடலை மாடசுவாமி கதை வில்லிசையும், 7 மணிக்கு சுடலைமாட சுவாமிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது.

    கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குடும்ப வாரிசுதாரர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×