search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பேரூராட்சி பகுதிகளில் விஜய்வசந்த் எம்.பி. மக்களிடம் குறைகள் கேட்டார்
    X

    கன்னியாகுமரி பேரூராட்சி பகுதிகளில் விஜய்வசந்த் எம்.பி. மக்களிடம் குறைகள் கேட்டார்

    • சுற்றுலாத் திட்டங்களை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
    • அந்தோணியார் குருசடியில் மாலை அணிவித்து வணங்கினார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட சுனாமி குடியிருப்புக்கு வருகை தந்த விஜய்வசந்த் எம்.பி. அவர்களுக்கு ஊர் மக்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

    அங்கு உள்ள சார்ஜியார் குருசடியில் மாலை அணிவித்து வணங்கி அங்குள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார். அங்கு வசிக்கும் பொது மக்கள் தங்களுக்கு போதிய சாலை வசதி இல்லை, மழைக்காலத்தில் தெருக்களில் மழை நீர் தேங்கி பெரிதும் பாதிக்கப்ப டுவதாக கூறினர். இதனை விரைவில் சரிசெய்து தருவ தாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.

    பின்பு கன்னியாகுமரி தெற்கு குண்டல் பகுதியில் பொதுமக்களை சந்தித்த விஜய்வசந்த் எம்.பி.யை ஊர் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அங்குள்ள முத்தாரம்மன் திருக்கோவிலின் பின்பு றம் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நிகழ்ச்சி நடக்கும்போது உணவு அருந்த போதிய வசதி இல்லாததால் சமுதாய கூடத்தின் மேல் மாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று மனு அளித்தனர். அந்த கட்டிடத்தை பார்வை யிட்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி தருவ தாக கூறினார்.

    அதே போல் கன்னியா குமரி வில்லியம் பூத் பகுதிக்கு சென்ற விஜய்வசந்த் அங் குள்ள அந்தோணியார் குருசடியில் மாலை அணிவித்து வணங்கினார். பொதுமக்களிடம் அங்கு நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்தும் கேட்டறிந்தார். குடிதண்ணீர் விரைவாக கிடைக்க சிறப்பு நிலை பேரூராட்சியில் பேசி யிருப்பதாகவும் விரைவில் உங்கள் குறை தீர்க்கப்படும் என தெரிவித்தார். சரியான சாலை வசதி இல்லை அதை நிவர்த்தி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    பின்பு கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி அலுவலகத்துக்கு வருகை தந்த எம்.பி. விஜய்வசந்த் அவர்களை வார்டு உறுப் பினர்கள் சால்வை அணி வித்து வரவேற்பு அளித் தனர். அங்குள்ள அவைக் கூடத்தில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ஸ்டீபன் தலை மையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது பேரூராட்சி உறுப்பினர்கள் தங்கள் வார்டு பகுதியில் உள்ள திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொண்ட னர். சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைப்பது, சுற்றுலாத் திட்டங்களை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த குறை கேட்பின் போது விஜய்வசந்த் எம்.பி.யுடன் மாநில செயலாளர் சீனிவாசன், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செய லாளர் தாமஸ், வட்டார காங்கிரஸ் தலைவர் முருகே சன், நகர காங்கிரஸ் தலைவர் ஜவகர், துணைத் தலைவர் நெப்போலியன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவர் கிங்ஸ்லி, லீபுரம் காங்கிரஸ் தலைவர் ஆரோக்கியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×