search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்கடலில் படகு மீது கப்பல் மோதிய விபத்தில் காயமடைந்த மீனவர்களுக்கு விஜய்வசந்த் எம்.பி. ஆறுதல்
    X

    ஆழ்கடலில் படகு மீது கப்பல் மோதிய விபத்தில் காயமடைந்த மீனவர்களுக்கு விஜய்வசந்த் எம்.பி. ஆறுதல்

    • மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களை மாலத்தீவு கப்பல் படையினர் மீட்டு கரை சேர்த்தனர்.
    • காயமடைந்த மீனவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்

    நாகர்கோவில் :

    இரவிபுத்தன்துறையை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த மாதம் 7-ந்தேதி ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு மாலத்தீவுக்கு சென்று கொண்டிருந்த இழுவை கப்பல் மோதியதில் படகு முற்றிலும் சேதமடைந்தது. இதில் மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களை மாலத்தீவு கப்பல் படையினர் மீட்டு கரை சேர்த்தனர்.

    இந்நிலையில் அவர்கள் சொந்த ஊரான குமரி மாவட்டம் இரையு மன்துறைக்கு வந்து சேர்ந்த னர். அவர்களை விஜய்வசந்த் எம்.பி. மற்றும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும் மீனவர்கள் தரப்பில் சேதமடைந்த படகு மற்றும் பொருட்களுக்கு ரூ.1½ கோடி மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், மோதிய கப்பல் நிறுவனத்தி டம் இருந்து நஷ்ட ஈடாக பெற்று தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும் விஜய் வசந்த் எம்.பி. டெல்லி தூதரக அதிகாரியிடம் பேசி இதற் கான முயற்சி மேற்கொள ளப்படும் எனவும், காயமடைந்த மீனவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

    நிகழ்ச்சியில் இரவி புத்தன்துறை பங்குத்தந்தை ரெஜூஸ்பாபு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கிய ராஜன், தூத்தூர் கிறிஸ்து தாஸ், பஞ்சாயத்து கமிட்டி தலைவர் லைலா, கவுன்சிலர் பேபி ஜான், காங்கிரஸ் பஞ்சாயத்து கமிட்டி தலைவர் ஜஸ்டின், நாகர்கோவில் மாநகர தலைவர் நவீன்குமார், குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×