search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி முக்கடல் சங்கம பகுதியில் விஜய்வசந்த் எம்.பி. ஆய்வு
    X

    குமரி முக்கடல் சங்கம பகுதியில் விஜய்வசந்த் எம்.பி. ஆய்வு

    • சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உலகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
    • கொரோனா காலத்திற்கு முன் இயற்கையான மண் பரப்பாகவே இருந்தது.

    நாகர்கோவில் : சபரிமலை சீசன் தொடங்கியதையடுத்து சுற்றுலா தலமான கன்னியாகுமரி சப்பாத்து பகுதியில் கடலில் நீராடும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து விஜய்வசந்த் எம்.பி., தேவஸ்தான அதிகாரி, சுற்றுலா துறை அதிகாரி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அதிகாரிகள் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் விஜய்வசந்த் எம்.பி. கூறியதாவது:-சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உலகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு 3 கடல்கள் சங்கமம் ஆகும் பகுதியான திருவேணி சங்கமம் பகுதி மக்கள் கடலில் புனித நீராடும் பகுதி, கொரோனா காலத்திற்கு முன் இயற்கையான மண் பரப்பாகவே இருந்தது. கடல் அலை கரையில் எவ்வளவு தூரம் அலை கூட்டங்கள் வந்தாலும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தது. மத்திய அரசின் கடற்கரை மேம்பாட்டு திட்டத்தில், மத்திய அதிகாரிகள் உருவாக்கிய திட்டத்தின்படி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மணல் பாங்கான பகுதியில் மக்கள் புனித நீராடிய பகுதியில் மண்பரப்பு பகுதியில் கருங்கல்லால் சப்பாத்து போன்ற பகுதியை உருவாக்கினார்கள். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற்றது.

    கடல் மணல் பரப்பில் கல்லால் சப்பாத்து அமைக்கும் பணிக்கு, அன்றைய கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் பணம் ஒதுக்கப்பட்டது. மணல் பரப்பில் சப்பாத்து அமைத்தால், எப்போதும் அலை அடித்துக்கொண்டி ருக்கும் பகுதியில் பாசி படியும், இதனால் கடலில் நீராடுபவர்கள் "கால்" வழுக்கி கீழே விழும் நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கையை மத்திய அரசின் அதிகாரிகளிடம் தெரிவித்தபோது அதனை அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கொரோனா காலத்தில் இந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டது.முக்கடல் சங்கமம் கடல் பரப்பில் சப்பாத்து பகுதியில் நீராடிய பலரும் கால் வழுக்கி சப்பாத்து பகுதியிலே கீழே விழுந்ததில் பலருக்கும் தலையில் அடிபட்டு உள்ளது. காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்வதும். பின்னர் இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புவதும் ஒரு தொடர் கதையாக நடந்து வருகிறது.2 வட மாநிலத்தவர் சப்பாத்து பகுதியில் வழுக்கி விழுந்ததில் தலையில் பலமான காயம் ஏற்பட்டு பலியாகினர்.

    இந்நிலையில் தற்போது சபரிமலை சீசன் தொடங்கியதையடுத்து கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்கள் அதிகமாக வரும் கால கட்டத்தில் அனைத்து அய்யப்ப பக்தர்களும் கடலில் புனித நீராடும் நிலையில் அய்யப்ப பக்தர்கள் மட்டும் அல்லாது, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.மேலும் படித்துறையில் பாசி படிந்துள்ள பகுதியை முழுவதுமாக அகற்றி விட்டு மண் பரப்பு பகுதியை மீண்டும் உருவாக்கிட நடவடிக்கை எடுக்க உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×