என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராஜாக்கமங்கலம் யூனியனில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி - கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு
- காற்றாடிதட்டு குக்கிராமத்தில் 61 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நிர்வாக அனுமதி
- ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஆதாரத்தினை ஆய்வு செய்யப்பட்டது
நாகர்கோவில் :
ராஜாக்கமங்கலம் யூனியன், தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட காற்றாடிதட்டு பகுதியில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2022-23-ம் ஆண்டு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தர்மபுரம் ஊராட்சியில் காற்றாடிதட்டு குக்கிராமத்தில் 61 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நிர்வாக அனுமதி பெறப்பட்டது. இதில் 52 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. 9 வீடுகளுக்கு ஏற்கனவே குடிநீர் ஆதாரம் உள்ளது. இன்று கலைசெல்வி மற்றும் கிருஷ்ண தங்கம் ஆகியோ ரது வீடுகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஆதாரத்தினை ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.