என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர் நகரில் தலை விரித்து ஆடும் தண்ணீர் பிரச்சனை
நாகர்கோவில் :
நாகர்கோவில் நகருக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. முக்கடல் அணையில் இருந்து பைப்லைன் மூலமாக வடசேரி கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டியதையடுத்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்தது. இதனால் முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் அடிக்கு சென்றது. அணை நீர்மட்டம் இன்று காலை மைனஸ் 12.90 அடியாக உள்ளது. அணையில் உள்ள தண்ணீர் குட்டையில் தேங்கி கிடப்பது போல் குறைவாகவே காட்சியளிக்கிறது.
அணையின் நீர்மட்டம் மைனஸ் அடிக்கு சென்றதால் தண்ணீர் விநியோகம் செய்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட் டுள்ளது. பொதுமக்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை தற்போது சப்ளை செய்து வருகிறார்கள். ஆனால் போது மான அளவு தண்ணீர் பொது மக்களுக்கு வழங்கப்படவில்லை. தண்ணீர் பிரச்சினை தீர்க்க, மேயர் மகேஷ் மாநகராட்சி அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
புத்தன் அணை குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே புத்தன் அணையிலிருந்து வெள்ளோட்ட மாக கிருஷ்ணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலை யத்திற்கு கொண்டுவரப்படும் தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்போது நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. கோட்டாறு, மீனாட்சி புரம், வடசேரி பகுதிகள் மட்டுமின்றி அனைத்து வார்டு களிலும் தண்ணீர் பிரச்சனை உள்ளது. இதையடுத்து அந்த வார்டு கவுன்சிலர்கள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரி களை சந்தித்து வலியுறுத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்ததையடுத்து அணையின் நீர்மட்டம் சரியத்தொடங்கியுள்ளது.
பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 25.64 அடியாக உள்ளது. அணைக்கு 167 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 703 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
பெருஞ்சானி அணை நீர்மட்டம் 25.10 அடியாக உள்ளது. அணைக்கு 14 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 11.28 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 11.38 அடியாகவும் உள்ளது. பொய்கை நீர்மட்டம் 11 அடியாகவும் மாம்பழத்துறை யாறு அணையின் நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது. அணைகளின் நீர்மட்டம் ஒருபுறம் சரிந்து இருக்க பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்