என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல தயாராக உள்ளோம் : அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
- நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை ஆய்வுக் கூட்டம் இன்று நடந்தது.
- அமைச்சர் செஞ்சி கே. எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை ஆய்வுக் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். அமைச்சர் செஞ்சி கே. எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி கே. எஸ் மஸ்தான் கூறியதாவது:-
அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும். சிறுபான்மையினர் கடன் திட்டங்கள் மேம்பாட்டு திட்டங்கள் முழுமையாக மக்களிடம் சென்றடைய வேண்டும். அரசின் திட்டங்களுக்கு அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். ஒரு திட்டங்கள் அறிவிக்கப்பட்டால் அந்தத் திட்டங்களை அறிந்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும்.
குமரி மாவட்டம் அனைத்து நிலைகளிலும் முன்னிலை பெற்ற மாவட்ட மாக விளங்குகிறது. தமிழக முதல்- அமைச்சர்மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு மோட்டார் பொருத்திய ஆயிரம் தையல் இயந்தி ரங்கள் மற்றும் உலமாக்கள் நல வாரியத்தில் உறுப்பின ராக உள்ள 10 ஆயிரத்து 518 பேருக்கு சைக்கிள் வழங்க டெண்டர் பிறப் பிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தையல் எந்திரம் மற்றும் சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி வாசல்கள் தேவாலயங்களை பழுது பார்ப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. தேவாலய சீரமைப்பிற்கு குறைவான மனுக்களே வந்து கொண்டிருக்கின்றன. தற்போது அதற்காக ஒதுக்கப்படும் நிதிகள் குறைவாக உள்ளதாக கூறி உள்ளார்கள். ஒரு தேவாலயத்தை சீர மைக்க எவ்வளவு நிதி தேவைப்படுகிறதோ அதை மதிப்பீடு செய்து நீங்கள் அனுப்பி வைத்தால் துறை வாரியாக ஆய்வு செய்து அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
உலமாக்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது போல் கிறிஸ்தவ தேவாலயங்களில் நல வாரியம் அமைக்க கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் அதற்கான ஒப்புதலை அளித்துள்ளார். இதில் 18 முதல் 60 வயது வரை உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுபான்மை துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தமிழக முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருவதன் காரணமாக முதல்வர்களின் முதல்வராக விளங்கி வருகிறார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங் களும் திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழகத்தில் மக்கள் நல திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை ஒரு ஆண்டுகளில் செய்து முடித்து முதல்-அமைச்சர் சாதனை படைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறி னார்.
விழாவில் 10 பெண் களுக்கு இலவச தையல் எந்திரங்களையும் அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் வழங்கினார்.
கூட்டத்தில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கூறிய தாவது:-
குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான தொழி லாளர்கள் வெளிநாடு களில் வேலை பார்த்து வருகிறார்கள். தொழி லாளர்கள் சிலர் அங்கு மரணமடைந்தால் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு பல மாதங்கள் ஆகிறது.எனவே வெளிநாடுகளில் மரணம் அடையும் தொழி லாளர்களின் உடல்களை சொந்த ஊருக்கு விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கும் வகையில் அரசு முயற்சிகளை எடுக்க வேண்டும்.அதேபோல் கிறிஸ்தவ தேவாலயங்கள் சீரமைப்பிற்கு கூடு தல் நிதி ஒதுக்க வேண்டும். சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வித் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
பின்னர் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த நாட்டில் எங்கள் மீது ஊழல் பட்டியல் சுமத்தாதவர்களே கிடையாது. பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் இவர்கள் மீதும் ஊழல் பட்டியல் கூறினார்கள். ஆனால் எந்த ஊழல் பட்டியலும் நிரூபிக்க முடியவில்லை. கலைஞரின் தொண்டர்கள் நாங்கள். எங்கள் மீது கூறும் அனைத்து பொய் புகார்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல தயாராக உள்ளோம் ஆனால் புகார் என்று சொன்னால் விசாரிக்க கூட தடை விதிக்க வேண்டும் என்று சொன்னவர்கள் கடந்த அமைச்சர்கள், அதை கூட தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்.
அண்ணாமலை முழுமையாக அனைத்து விசயங்களையும் பேசட்டும் அதன் பின் அவருக்கு பதில் அளிப்போம். மற்ற மாநிலங்களில் நடக்கும் சில விசயங்களை சுட்டிக்காட்டி தமிழகத்தில் பிரச்சினை ஏற்படுத்த பார்க்கிறார்கள். ஆனால் தமிழர்கள் அதற்கு இடமளிக்கமாட்டார்கள் இது தான் கடந்த கால வரலாறு.
கடந்த ஆட்சியில் வெளிநாட்டில் இருப்பவர்கள் சடலம் வருவதற்கு ஆண்டு கணக்கானது. ஆனால் தற்போது 10 நாட்களில் கூட உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வாழ் தமிழர் நல வாரியம் அமைப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நலவாரியம் அமைந்தவுடன் இதை விட வேகமாக செயல்பட முடியும், பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மத்திய அரசு குறிப்பிட்ட அளவு சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்க இலக்கை குறிப்பிட்டுள்ளது. இதனை அதிகரிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. மத்திய அரசு வழங்கவில்லை என்றால் உதவித்தொகை தமிழக அரசே வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்