search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிரெயின்ஸ் வலைதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வி.ஏ.ஓ. அலுவலகங்களில் சிறப்பு முகாம் - கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    X

    'கிரெயின்ஸ்' வலைதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வி.ஏ.ஓ. அலுவலகங்களில் சிறப்பு முகாம் - கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

    • அடிப்படை விவரங்களை கொண்டு கிரெயின்ஸ என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • சிறப்பு முகாம் கள் நாளை (19-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வேளாண் அடுக்ககம் உருவாக்குவதன் மூலம் நில விவரங்களுடன் இணைக்கப் பட்ட விவசாயிகளின் விவரம், நில உடமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல் மற்றும் நில உடமை வாரியாக சாகுபடி, பயிர் விவரம் ஆகிய அடிப்படை விவரங்களை கொண்டு கிரெயின்ஸ (குரோவர் ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேசன் ஆப் அக்ரிகல்சுரல் இன்புட் சிஸ்டம்) என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த கிரெயின்ஸ் வலை தளத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை உழவர் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, உணவு வழங்கல் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை, விதைச்சான்றளிப்பு துறை, வேளாண் பொறியியல் துறை, சர்க்கரை துறை உள்ளிட்ட பல்வேறு துறை இணைக்கப்பட உள்ளது.

    மேலும் இந்த வலைதளம் மூலம் அரசின் நலத்திட்டங் கள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்ப டுத்திட முடியும். ஒற்றை சாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயி கள் அனைத்து பயன்க ளுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    ஒவ்வொரு முறையும் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விவசாயி கள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம். வேளாண் மை சார்ந்த அனைத்து துறைகளும் விவசாயிகளின் அடிப்படை விவரங்கள் மற்றும் பயிர் விவரங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பயன்களை அளிக்க முடியும். திட்ட நிதி பலன்கள் நேரடி பண பரிமாற்றம் மூலம் அனுப் பப்படும்.

    மேலும் இந்த வலை தளத்தில் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல், புகைப்படம் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், நிலப்பட்டா, ஆவண நகல் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இதில் வேளி மலை, வில்லுக் குறி, அடைக்காகுழி, தேங் காப்பட்டணம், கொல்லங் கோடு ஏ, கீழ் மிடாலம் பி, பெருஞ்சாணி, பாகோடு, தேவிகோடு, அருமனை, பாகோடு ஏ, மாதவலாயம், நாவல்காடு ஆகிய 13 கிராமங்களில் உதவி வேளாண்மை அலுவலர்கள் தலைமையிலும், வெள்ளாம் கோடு, அண்டு கோடு பி, களியல், பொன்மனை பி, ஆரல்வாய்மொழி வடக்கு ஆகிய 6 கிராமங்களில் உதவி தோட்டக்கலை அலு வலர்களின் தலைமையிலும், இதர கிராமங்களில் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களின் தலைமையிலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவ லகங்களில் சிறப்பு முகாம் கள் நாளை (19-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    முகாமில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் மேற்கண்ட ஆவணங்களை நடைபெறவிருக்கும் முகாம்களில் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவ லர், உதவி தோட்டக்கலை அலுவலரிடம் அளித்து இந்த கிரெயின்ஸ் வலை தளத்தில் தங்களின் அடிப்படை விவரங்கள் பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×