என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 15-ந்தேதி குமரி வருகை
- இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைக்கிறார்
- ன்னேற்பாடுகளை தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் பார்வையிட்டார்.
நாகர்கோவில்:
தி.மு.க.வின் 2-வது இளைஞரணி மாநில மாநாடு வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி சேலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது. 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதனையொட்டி மாநாடு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இளைஞர் அணி மாநாடு விளக்க இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் இருந்து இளைஞர் அணி மாநாடு விளக்க இரு சக்கர வாகன பேரணியை நாளை மறுநாள் (15-ந்தேதி) தொடங்கி வைக்கிறார்.
கன்னியாகுமரியில் அதற்கான முன்னேற்பாடுகளை தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் பார்வையிட்டார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, பேரூர் செயலாளர் குமரி ஸ்டீபன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அகஸ்தீசன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பேரணியை தொடங்கி வைக்க உதயநிதி ஸ்டாலின் நவம்பர் 14-ந்தேதி இரவு கன்னியாகுமரி வந்து சேருகிறார். மறுநாள் காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைக்கிறார். பின்னர் சிறிது தூரம் அவரும் இருசக்கர வாகன பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பேரணியில் 200 பைக்குகள் இடம் பெறுகின்றன. தமிழ்நாடு 4 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் உள்ளடக்கிய மண்டலத்தில் உள்ள சட்டமன்ற ெதாகுதிகளில் 50 பைக்குகளில் சென்று மாநாடு விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கி விளக்குவர். பின்னர் நவம்பர் 27-ந்தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளன்று பைக் பேரணி சென்னை சென்றடையும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்