search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல்.கொள்ளையர்கள் தாக்குதலில் தொழிலாளி பலி
    X

    குளச்சல்.கொள்ளையர்கள் தாக்குதலில் தொழிலாளி பலி

    • ரவுடி உள்பட 2 பேர் கைது
    • கோவில் அருகே அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கணேசன் என்பவர் படுகாயத்துடன் கிடந்தார்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே வெட்டு மடை மேற்கு கடற்கரை சாலையில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதே பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் (வயது 61) என்பவர் இருந்து வருகிறார்.

    இவர் கடந்த சனிக்கிழமை காலை கோவிலுக்கு வந்த போது கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. குத்துவிளக்கு களும் திருடப்பட்டிருந்தன. கோவில் அருகே அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கணேசன் என்பவர் படுகாயத்துடன் கிடந்தார்.

    இதை பார்த்த வேலாயுதம் காயத்துடன் கிடந்த கணேசனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் தாக்குதலில் கணேசன் இறந்திருப்பது தெரியவந்தது.

    இசக்கியம்மன் கோவிலில் கைவரிசை காட்டிய கொள் ளையர்கள், மண்டைக்காடு பகுதியில் உள்ள விநாயகர் கோவில் மற்றும் வெட்டு மடை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியரிடமும் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவு காட்சிகளை கைப் பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது கொள்ளை யர்கள் உருவம் பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்திய போது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த உருவம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 2 பேரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட இருவரிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் குளச்சல் பகுதியைச் சேர்ந்த கவாஸ்கர், குமார் என்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கவாஸ்கர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட கவாஸ்கர், குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×