search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விராலிபட்டியில் கருணாநிதி நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி
    X

    வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. கோப்பையை வழங்கினார்.

    விராலிபட்டியில் கருணாநிதி நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி

    • கிஷோர்கிருத்திகா ப்ளூ மெட்டல்ஸ், விராலிப்பட்டி வி.ஐ.பி. கிரிக்கெட் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்தினர்
    • விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிப்பட்டியில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி கிஷோர்கிருத்திகா ப்ளூ மெட்டல்ஸ், விராலிப்பட்டி வி.ஐ.பி. கிரிக்கெட் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்தினர். கிரிக்கெட் போட்டியை வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.விராலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன.முதல் 5 இடங்களை பிடித்தவர்க ளுக்கு பரிசு தொகையும் கோப்பையும் வழங்கப்ப ட்டது. இறுதிப் போட்டியில் போடி உப்புகோட்டை அணியும்,விராலிப்பட்டி அணியும் மோதின. இதில் போடி உப்புக்கோட்டை வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செந்தில்குமார் எம்.எல்.ஏ. முதலிடம் பிடித்த போடி உப்புக்கோட்டை அணிக்கு பரிசுத் தொகை ரூ.15 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையை வழங்கினார். மேலும் 2-ம் இடம் பிடித்த விராலிப்பட்டி அணிக்கு பரிசுத்தொகை ரூ.12500 மற்றும் சுழற் கோப்பையையும் வழங்கினார். சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு ஆட்டநாயகன் விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் சிவக்குமார், நரசிம்மன், சந்திரசேகர், ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    போட்டி ஏற்பாடுகளை கிஷோர்கி ருத்திகா ப்ளூ மெட்டல்ஸ் மற்றும் வி.ஐ.பி. கிரிக்கெட் கிளப் செய்திருந்தனர்.

    Next Story
    ×