search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி கே.ஆர். குழுமம் - கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தின மாரத்தான் போட்டி
    X

    போட்டியை கோவில்பட்டி, வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    கோவில்பட்டி கே.ஆர். குழுமம் - கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தின மாரத்தான் போட்டி

    • வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • 25 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 540 மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு, இன்று காலை 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    போட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள கே.ஆர். மணிமண்டபத்தில் தொடங்கி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நேஷனல் பொறியியல் கல்லூரி வழியாக மீண்டும் கே.ஆர்.மணிமண்டபம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது.

    போட்டியை கோவில்பட்டி, வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குனர் சண்முகவேல், முதல்வர் காளிதாச முருகவேல், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் மற்றும் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மதிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 25 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 540 மாணவிகள் கலந்து கொண்டனர். முதல் பரிசு ரொக்கம் ரூ.3ஆயிரம், கேடயம் மற்றும் சான்றிதழை காட்டுநாயக்கம்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி கனகலட்சுமியும், 2-ம் பரிசு ரூ.2 ஆயிரம், கேடயம் மற்றும் சான்றிதழை கனிஷ்காவும், 3-ம் பரிசு ரூபாய் 1,000, கேடயம் மற்றும் சான்றிதழை சங்கீதாவும் பெற்றனர். மேலும் 22 மாணவிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.500 வழங்கப்பட்டது.

    Next Story
    ×