என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவில்பட்டி மலையாளத்து சுடலை மகாராஜா ஆலய பூக்குழி திருவிழா
Byமாலை மலர்9 Aug 2022 2:20 PM IST
- ஆடி கொடை விழாவின் முக்கிய நிகழ்வான அக்னி சட்டி மற்றும் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
- கோவில் முன்புறம் அமைந்துள்ள அக்னி குண்டத்தில் அக்னி சட்டியுடன் இறங்கி தீ மிதித்து வலம் வந்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற சிவசக்தி பத்திரகாளி அம்மன் மலையாளத்து சுடலை மகாராஜா ஆலய ஆடி கொடை விழா மற்றும் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.
முக்கிய நிகழ்வான அக்னி சட்டி மற்றும் பூக்குழி திருவிழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக ஊர் சுற்றி விளையாடி, பின்னர் கோவில் முன்புறம் அமைந்துள்ள அக்னி குண்டத்தில் அக்னி சட்டியுடன் இறங்கி தீ மிதித்து வலம் வந்தனர்.
தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. விழாவின் இறுதி நிகழ்ச்சியாக வில்லுப்பாட்டு நடைபெற்றது. ஏற்பாடுகளை சங்கர் சாமிகள் செய்திருந்தார். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு முக கவசம் மற்றும் கிருமி நாசினி தெளித்து கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.
Next Story
×