என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சர்வதேச போட்டியில் பங்கேற்க கோவில்பட்டி என்.இ.சி. கல்லூரி மாணவர் தகுதி
- அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா, விண்வெளி ஆய்விற்கான கைப்பேசி செயலி வடிவமைப்பு போட்டியை சர்வதேச அளவில் 2012-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது
- 87 நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
கோவில்பட்டி:
சர்வதேச அளவில் நடைபெறவுள்ள போட்டியில் கோவில்பட்டி என்.இ.சி. கல்லூரி மாணவர் பங்கேற்ற அணி தகுதி பெற்றுள்ளது.
அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா, விண்வெளி ஆய்விற்கான கைப்பேசி செயலி வடிவமைப்பு போட்டியை சர்வதேச அளவில் 2012-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்தாண்டு ஆஸ்திரேலியா, பிரேசிலிய, கனேடிய, ஐரோப்பிய, பராகுவே ஆகிய விண்வெளி நிறுவனம் மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம், தேசிய விண்வெளி செயல்பாடுகள் ஆணையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மெக்சிகன் விண்வெளி ஏஜென்சி, அர்ஜென்டினா, பஹ்ரைனின் தேசிய விண்வெளி அறிவியல் நிறுவனம், தென்ஆப்ரிக்கா தேசிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இப்போட்டியை நடத்துகிறது. 87 நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இந்திய அளவில் இம்மாதம் 1, 2-ந்தேதிகளில் நடைபெற்ற கைப்பேசி செயலி வடிவமைப்பு போட்டியில் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறை மாணவர் குருபிரசாத் டீம் சிங்குளாரிட்டி எனும் குழுவில் இடம்பெற்று ஆக்குமெண்டேட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி கணினி தொழில்நுட்பத்தின் மூலம் தயாரித்து சமர்ப்பித்திருந்த செயலி, படைப்பு அகில இந்திய அளவில் முதல் பரிசை வென்று சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. இதில் இந்தியா அளவில் 1200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களது படைப்புகளை சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் முதல் பரிசு பெற்ற குழுவில் இடம் பெற்றிருந்த மாணவர்களை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
மேலும் நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர் குருபிரசாத்தை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், கல்லூரி இயக்குநர் சண்முகவேல், முதல்வர் காளிதாசமுருகவேல் மற்றும் துறைத் தலைவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பாராட்டி, சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்