என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் 48 கடற்கரை கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
- இலங்கையில் சீன ராணுவப்படை குவிக்கப்பட்டதால் நடவடிக்கை
- மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான 11 சோதனை சாவடிகளிலும் போலீசார் இரவு- பகலாக வாகன சோதனை நடத்திவருகிறார்கள். கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து வாகனங்கள் மூலமும் கடலோரப் பகுதிகளில் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகிறார்கள்.
- லாட்ஜூகளிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தங்கிஇருக்கிறார்களா? என்றும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி,
அக்.18-
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவுவதை பயன்படுத்தி அங்கு சீன நாட்டின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
ஏற்கனவே இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீன நாட்டின் உளவு கப்பல் இலங்கைக்கு வந்தது. இந்த நிலையில் சமீப காலமாக இலங்கையில் சீன ராணுவ படை குவிக்கப்பட்டு சீன ராணுவ வீரர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே இலங்கையின் அண்டை நாடான இந்தியா முழுவதும் கடலோர பகுதிகளை கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையில் கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 கடற்கரை கிராமங்களிலும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இரவு-பகலாக போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி மற்றும் குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் இந்த பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் ரோந்து சென்று சந்தேகப்படும்படியான படகுகள் ஏதாவது வருகிறதா? என்று தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.
மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான 11 சோதனை சாவடிகளிலும் போலீசார் இரவு- பகலாக வாகன சோதனை நடத்திவருகிறார்கள். கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து வாகனங்கள் மூலமும் கடலோரப் பகுதிகளில் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகிறார்கள்.
லாட்ஜூகளிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தங்கிஇருக்கிறார்களா? என்றும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்