search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணி சூரியமூர்த்தி சாமி கோவிலில் கும்பாபிஷேகம்
    X

    கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    வேளாங்கண்ணி சூரியமூர்த்தி சாமி கோவிலில் கும்பாபிஷேகம்

    • மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
    • அம்மனுக்கு கலசநீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்று, தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச்யில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு சூரியமூர்த்தி சுவாமிகள் கோவில் அமைந்து ள்ளது.

    இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெறுவதற்காக கோவில் திருப்பணிகள் நிறைவுற்ற 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

    கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அனுஞக்ஞை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி , கோ பூஜை, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

    அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகளுடன் பூர்ணாஹூதி தீபாரதனைகள் நடைப்பெற்றது. தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மஹா பூர்ணாஹூதி நடைபெற்று யாகசாலை பூஜைகள் நிறைவடை ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.

    சிவாச்சாரியார் கடங்கங்களை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீசூரியமூர்த்தி சுவாமிக்கு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

    பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அம்மனுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.

    இக்கும்பாபிஷேகத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×