search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி வட்டார பகுதியில் முருங்கைகாயுடன் இலை, பூ, பட்டை கொள்முதல் செய்ய வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
    X

    உடன்குடி பகுதியில் முருங்கை பயிரிட்டுள்ள காட்சி.

    உடன்குடி வட்டார பகுதியில் முருங்கைகாயுடன் இலை, பூ, பட்டை கொள்முதல் செய்ய வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

    • உடன்குடி வட்டார பகுதியில் திரும்பிய திசைகளில் எல்லாம் முருங்கை விவசாயம் சிறப்பாக உள்ளது.
    • கடந்த ஆண்டு இதேமாதம் முருங்கைக்காய் ரூ.30 முதல் 40 வரை கொள்முதல் செய்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் தற்போது முருங்கை விவசாயம் முழு முயற்சியுடன் நடைபெறுகிறது. முன்பு ஒரு காலத்தில் தென்னை, பனை விவசாயம் நடந்த இடங்களில் எல்லாம் தற்போது முருங்கையை ஊடுபயிராக பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    திரும்பிய திசைகளில் எல்லாம் முருங்கை விவசாயம் சிறப்பாக உள்ளது. ஆனால் 1 கிலோ ரூ.20 முதல் ரூ.25-க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

    கடந்த ஆண்டு இதேமாதம் முருங்கைக்காய் ரூ.30 முதல் 40 வரை கொள்முதல் செய்தனர். தற்போது அடிக்கடி குளிர்ந்த காற்று வீசுவது, திடீர் என சாரல் சாரல் மழை பெய்வதால் முருங்கைபூக்கள் எல்லாம் உதிர்ந்துவிடுகிறது.

    முருங்கைக்கு மருந்துகள் தெளித்தல், உரம் வைத்தல் கூறி தொழிலாளி ஊதியம் என செலவு அதிகமாக வருகிறது. ஆனால் இந்த செலவுக்கு ஏற்றபடி விளைச்சலும் இல்லை, விலையும் இல்லை. முருங்கை காயுடன் முருங்கை இலை, முருங்கைப்பூ, முருங்கை பட்டை என 4 விதமாக கொள்முதல் செய்து வெளியிடங்களுக்கு அனுப்பினால் தான் முருங்கை விவசாயத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×