என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள் வைத்து பூட்டிய அறைக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு
- யாகசாலை அமைப்பதற்காக மேற்கு கோபுர வாசல் நந்தவனப் பகுதியில் பள்ளம் தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.
- இந்து சமய அறநிலையத்துறை 6 பேர் கொண்ட குழுவினர் சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு வருகை புரிந்து கண்டெடுக்கப்பட்ட ஆய்வு மேற்கொண்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் திருப்பணிகள் நிறைவு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 16 ம் தேதி யாகசாலை அமைப்பதற்காக மேற்கு கோபுர வாசல் நந்தவனப் பகுதியில் பள்ளம் தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள் ,55 பீடம் மற்றும் 462 செப்பேடுகள், மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
இதனை அடுத்து ஐம்பொன் சிலைகளும் மற்றும் செப்பேடுகள் கோயிலின் பாதுகாப்பு அறையில் வட்டாட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாத்து வருகின்றனர்.
17ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு நூலாக்க திட்ட குழுவை 6 பேர் கொண்ட குழுவினர் சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு வருகை புரிந்து கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இதுவரை தமிழ்நாட்டில் ஓலை சுவடியில் எழுதிய பதிகங்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் முதன்முறையாக அதிக அளவு பதிகங்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டு தற்போது இங்கு சீர்காழி தான் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஐம்பொன் சிலைகள் கோயி லில் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு துப்பாக்கி ஏந்திய 2 அடுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு கருதி கூடுதலாக இரும்பு கிரில் கேட் பொருத்தப்பட்டுள்ளதை மயிலாடுதுறை மாவட்ட (பொறுப்பு) காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கண்டார்.
அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், புயல்.பாலசந்திரன், தனிப்பிரிவு ஆய்வாளர் சதீஸ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்