என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை டவுனில் பல மாதங்களாக பூட்டிக்கிடக்கும் பெண்கள் கழிப்பறை திறக்கப்படுமா?- சமூக ஆர்வலர்கள் மனு
- டவுன் போலீஸ் நிலையம் அருகே பெண்கள் மற்றும் ஆண்களுக்கென கழிவறை செயல்பட்டு வந்தது.
- கழிவறையை மீண்டும் திறந்திட மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட பொது ஜன பொது நல சங்க தலைவர் அய்யுப் மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லையின் இதய பகுதியாக விளங்கும் டவுனில் மேல ரத வீதி பகுதியில் டவுன் போலீஸ் நிலையம் அருகே பெண்கள் மற்றும் ஆண்களுக்கென கழிவறை செயல்பட்டு வந்தது. அதில் தற்போது பெண்கள் கழிப்பறையை மட்டும் செயல்படாமல் அடைத்து வைத்து பல மாதங்கள் ஆகின்றது. இதன் காரணமாக அந்த பகுதியில் பொருள்கள் வாங்குவதற்கும், போலீஸ் நிலையத்திற்கு வரும் பெண்களும் கடுமையான சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
கடந்த மாதம் 19-ந் தேதி இந்த கழிவறையை மீண்டும் திறந்திட மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க ப்பட்டது. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் உள்ளிட்டவர்களிடமும் நேரில் தகவல் தெரிவி க்கப்பட்டது. மாதங்கள் கடந்து விட்ட போதிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே உடனடியாக அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.