search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மதுரை முல்லை நகர் குடியிருப்பு பகுதிகளில் வடியாத வெள்ளம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    மதுரை முல்லை நகர் குடியிருப்பு பகுதிகளில் வடியாத வெள்ளம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    • ஆலங்குளம் கண்மாய் நிரம்பியதால் முல்லை நகருக்குள் வெள்ளம்.
    • முழங்கால் அளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

    மதுரையில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. மாலை 3 மணிக்குப் பிறகு 15 நிமிடத்தில் 4.5 செ.மீட்டர் மழை பெய்ததால் வெள்ளக்காடாக மாறியது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அக்டோபர் மாதம் மழை பெய்தததாக கூறப்படுகிறது.

    இந்த கனமழையால் முல்லை நகர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆலங்குளம கண்மாய் நிரம்பியதுதான். முல்லை நகர் கிருஷ்ணாபுரம் காலனி 8-வது தெரு மற்றும் அதன் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    நேற்று மாலையுடன் மழை நின்றாலும் இந்த பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் சென்றுள்ளதால் மக்கள் மாடி மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர்.

    வெள்ளம் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்த்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நேற்று வந்து பார்வையிட்டனர். வெள்ளத்தை அப்புறப்படுத்துவதற்கு பணிகளை மெற்கொள்வதாக தெரிவித்தனர். ஆனால் இன்று காலை வரை யாரும் வரவில்லை. இப்படியே இருந்தால் காபி, டீ, கஞ்சி காய்த்து குடிப்பது எப்படி என பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    அமைச்சர் மூர்த்தி வெள்ள நீர் அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்குள் வெள்ள நீர் அகற்றும பணி முழுமையாக நிறைவு பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×