search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் பறக்கும் பாலத்தில் பைக் ரேசில் ஈடுபட்ட 14 பேர் கைது
    X

    நத்தம் பறக்கும் பாலத்தில் பைக் ரேசில் ஈடுபட்ட 14 பேர் கைது

    • நத்தம் பறக்கும் பாலத்தில் பைக் ரேசில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

    மதுரை

    மதுரை-நத்தம் சாலையில் புதிதாக பறக்கும் பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் கீழ்பகுதியில் பயங்கர சத்தத்துடன் வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர்.

    விபத்தை ஏற்படும் வகையில் பொதுமக்களை அச்சுறுத்திய இந்த சம்பவம் குறித்து தல்லாதளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்றார்.

    அங்கு பைக் ரேசில் ஈடுபட்ட 14 வாலிபர்கள் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் செல்லூர் இருதயராஜபுரம் சேக்சுந்தர் மகன் முகமது சலீம், உத்தங்குடி வளர் நகர் முகமது மகன் ஹைதர் அலி, புதூர் முத்துராமலிங்கபுரம் சித்திக் ராஜா மகன் முஹம்மது ஆசிக், புதூர் ராமவர்மா நகர் நாகூர் மகன் சையது சிராபுதீன், அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் நகர் ஷேக்தீன் மகன் அப்துல் ரகுமான்.

    முகமது சிக்கந்தர் மகன் முகமது இப்ராகிம், முஹம்மது மிசானி மகன் முகமது அப்துல் அக்கீம், முகமது ஜஹாங்கீர் மகன் அப்துல் ரகுமான், உத்தங்குடி சிக்கந்தர் பாஷா மகன் அப்துல் அஜீஸ், உத்தங்குடி முத்துமுகமது மகன் சல்மான் கான், அய்யர் பங்களா முத்து செல்வம் மகன் ஆனந்தகுமார், புதூர் ஷேக் மைதீன் மகன் அப்துல் ரசாக், சையது அபுதாகீர் மகன் முகமது சம்சுதாவித், சிம்மக்கல் ராதாமணி மகன் விஷ்ணு என்பது தெரிய வந்தது. மேற்கண்ட 14 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ரேசுக்கு பயன்படுத்திய 10 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் இதுபோன்ற சாகச செயல்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதை கட்டுப்படுத்த போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×