என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை
- நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
- சிந்துப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் கிருத்திகா (வயது 17). இவர் விடத்தகுளத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்து திருமங்கலத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.
சில மாதங்களாக கிருத்திகாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த கிருத்திகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிந்துப்பட்டி அருகே உள்ள நாட்டார் மங்கலத்தைச் சேர்ந்தவர் பூமிராஜன். இவரது மனைவி கலா ராணி (வயது 45). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவியிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் வாழ்க்கை விரக்தி அடைந்த கலாராணி சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.