search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்
    X

    குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என முதல்வருக்கு பசும்பொன் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • கரும்புகளை விவசாயிடமே நேரில் அரசு கொள்முதல் செய்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திராவிடப் பெருநாள், உழவர் திருநாள், தமிழர் திருநாளான நம்முடைய வருடப்பிறப்பு, பொங்கல் விழா சீரும் சிறப்புமாக வருடந்தோறும் தமிழ் பெருங்குடி மக்களால் தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு விழாவாகவும், உலகிற்கு அறநெறி வகுத்த வள்ளுவர் பெருமகனார் பிறந்தநாள் விழாவாகவும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம். வரலாற்று பிரிவினைவாதிகள் தமிழர் திருநாள் பெருமையை திருடும் நோக்கத்தோடு சங்கராந்தி என்று தமிழனுக்கு சம்பந்தமில்லாத விழாவாக அன்றைய தினம் சனாதனக் கூட்டம் கொண்டாட எத்தனிக்கிறது.

    தமிழத்தில் வாழுகிற அனைத்து மதத்தினரும், அனைத்து சாதியினரும் சாதி மதமற்ற திராவிட திருநாளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ வேண்டுவதோடு, தமிழகத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் சனாதன கூட்டத்திற்கு வழி வகுத்திடாமல் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை ரம்ஜான் போல் கிறிஸ்துமஸ் போல் நம்முடைய உழவர் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் உழவர் திருநாளாக அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டுகிறேன்.

    திராவிட மாடல் அரசு நடத்தும் முதல்வர் திராவிடத் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டை தாரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட ரூ.2 ஆயிரம் வழங்க அ.தி.ம.மு.க. சார்பில் வேண்டுவதோடு வேட்டி, சேலை, செங்கரும்பும் வழங்க வேண்டுகிறேன். கரும்புகளை விவசாயிடமே நேரில் அரசு கொள்முதல் செய்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×