என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாலிபர்கள் உள்பட 3 பேர் தற்கொலை
- மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்கள் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இதுகுறித்து கீரைத்துறை, எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரையை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவருக்கு தீராத உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதற்காக இவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணம் ஆகவில்லை.
இந்த நிலையில் கார்த்திக் மேல் சிகிச்சைக்காக, மதுரை தெப்பக்குளம் மகாகணபதி நகரில் வசிக்கும் சகோதரர் வீட்டுக்கு வந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்திக் சம்பவத்தன்று மதியம் சகோதரர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிந்தாமணி கிழக்கு தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி விஜயா (54). இவருக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை நோய்கள் இருந்தன. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணம் ஆகவில்லை.
வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஜயா, நேற்று மதியம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
எஸ்.எஸ்.காலனி நண்பர்கள் தெருவை சேர்ந்தவர் வினோத் குமார் (27). இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் வினோத்குமார் அந்த பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்தப் பெண், செல்போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த வினோத்குமார் நேற்று மதியம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.