என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
33 கோடியே 38 லட்சம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர்
- இலவச பஸ் பயணம் மூலம் 33 கோடியே 38 லட்சம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.
- மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தால் அவர்களது பொருளாதார நிலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் பேசினார்.
மதுரை
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மதுரை புதூர் பணிமனையில் டிரைவர், கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.
அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி ஓய்வறையை திறந்து வைத்தார். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வுகால பலன்கள் மற்றும் விபத்தில்லாமல் பணியாற்றிய டிரைவர், கண்டக்டர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-
கிராமப்புற வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1972-ம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். தி.மு.க. ஆட்சி காலத்தில் அதிகளவில் அரசு பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. பஸ் வசதி இல்லாத பகுதிக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டு பஸ்கள் விடப்பட்டன.
தமிழகத்தில் கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தின் கீழ் இதுவரை 33 கோடியே 38 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ள னர். கட்டணமில்லா பஸ்சில் சராசரியாக ஒரு நாளைக்கு 5 லட்சத்து 56 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.
மதுரைக்கு 251 மாசு இல்லாத பஸ்கள் மற்றும் 100 மின்சார பஸ்கள் கொள்முதல் செய்ய திட்டம் உள்ளது. மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தால் அவர்களது பொருளாதார நிலை உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.