என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
லாரியில் கொண்டுவந்த 43 மாடுகள் பறிமுதல்
- திருமங்கலம் அருகே விதிகளை மீறி லாரியில் கொண்டுவந்த 43 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- உரிமையாளர் மற்றும் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம், ஆக.14-
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையிலிருந்து லாரியில் 43 மாடுகளை ஏற்றப்பட்டு மதுரை மாவ ட்டம் திருமங்கலம் அருகே உள்ள சொரிக்காம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.
ஒரே லாரியில் இடை வெளி யின்றி ஏராளமான மாடுகள் ஏற்றி வருவதாக விருதுநகர் மாவட்ட பிராணிகள் நலவாரிய அமைப்பான பிப்பீள் பார் அனிமல்ஸ் அமைப்பின் செயலர் சுனிதாகிறிஸ்டிக்கு புகார் வந்தது.
தொடர்ந்து திருமங்கலம் வந்த அவர் நேற்று இரவு கப்பலூர் மேம்பாலத்தில் மாடுகளுடன் வந்த லாரியை மறித்தார். பின்னர் இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை மாடுகளுடன் பறிமுதல் செய்தனர்.
லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடை யநல்லூர் மேல திருவேட்டையை சேர்ந்த லாரி உரிமையாளர் மனோகரன், டிரைவர் முத்துபாண்டி(32) என்பது தெரியவந்தது.
சுனிதா கொடுத்த புகாரில் போதுமான இடை வெளியின்றி மாடுகளை அடைத்து கொண்டும், போதுமான உணவு, தண்ணீர் கொடு க்காமல் நீண்டதூரம் லாரி யில் நிற்கவைத்து கொண்டு வந்ததாக வழக்குபதிவு செய்து கைது செய்தனர். 43 மாடுகளை விருதுநகரில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.