search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் கோவில்களில் ஆனி ஊஞ்சல் உற்சவம்
    X

    மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் கோவில்களில் ஆனி ஊஞ்சல் உற்சவம்

    • மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் கோவில்களில் ஆனி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா வருகிற 24-ந்தேதி தொடங்கி ஜூலை 2-ந்தேதி வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்தி களுடன் 100 கால் மண்ட பத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருள்வர்.

    வருகிற 26-ந்்தேதி உத்திரத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு வெள்ளியம்பல நடராஜர்- சிவகாமி அம்மனுக்கு ஆனி உத்திர திருமஞ்சனம் நடை பெறும். தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகளுக்கு பிறகு காலை 7 மணிக்கு பஞ்ச சபை நடராஜர்-சிவகாமி அம்மன் பல்லக்கில் எழுந்த ருளி மாசி வீதிகளில் வலம் வருவார்கள்.

    ஜூலை 3-ந்தேதி உச்சி கால பூஜையில் மூலவர் சொக்கநாத பெருமானுக்கு முக்கனி அபிஷேகம் நடை பெறும். இதற்கு பக்தர்கள் அபிஷேக பொருட்களை 25-ந் தேதி 7 மணிக்குள் வழங்கலாம். தொடர்ந்து பிரியாவிடையுடன் சுந்தரே சுவரர், மீனாட்சி அம்மன் தனித்தனி வெள்ளிக் குதிரை வாகனங்களில் சித்திரை வீதிகளில் வலம் வருவார்கள். வருகிற 23-ந்தேதி மாணிக்கவாசகர் புறப்படும், ஜூலை 3-ந்தேதி அருணகிரி நாதர் புறப்பாடும் நடை பெறும்.

    திருப்பரங்குன்றம் கோவில்

    திருப்ப ரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் வருகிற 24-ந்தேதி காப்பு கட்டு தலுடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்ட பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    10-ம் நாள் நிகழ்ச்சியாக ஜூலை 3-ந் தேதி முக்கனி பூஜை நடைபெறும். அன்றைய தினம் உச்சிகால வேளையில் சுப்பிரமணியர், சத்யகிரீசுவரர், பவளக் கனிவாய் பெருமாள், துர்க்கை, கற்பக விநாய கருக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் பணியா ளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×