search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னை தேர் பவனி நடந்தது
    X

    அன்னை தேர் பவனி நடந்தது

    • வாடிப்பட்டி ஆரோக்கிய தேவாலயத்தில் அன்னை தேர் பவனி நடந்தது
    • மதுரை-திண்டுக்கல் நகர்புறசாலை வழியாக பழையநீதிமன்றம் வரை சென்று திரும்பியது.

    வாடிப்பட்டி

    தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா கடந்தமாதம் 29-ந்தேதி மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று (வியாழக்கிழமை) ஆரோக்கிய அன்னையின் பிறப்புப்பெருவிழா, இறைவார்த்தை சபை 147-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 22-வதுஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடந்தது.

    முப்பெரும் விழா கூட்டுத் திருப்பலியை சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் நடத்தினார். குழந்தைஏசுவை கையில் ஏந்தியபடி ஆரோக்கியஅன்னை தேர்பவனி புறப்பட்டது.

    மதுரை-திண்டுக்கல் நகர்புறசாலை வழியாக பழையநீதிமன்றம் வரை சென்று திரும்பியது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இன்று காலை ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை வளன் தலைமையில் இறக்கப்பட்டு நன்றிதிருப்பலியுடன் விழா நிறைவுபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை எஸ்.வி.டி.அதிபர் அந்தோணி ஜோசப் அடிகளார், பங்குத்தந்தை வளன், உதவி பங்குதந்தை குழந்தையேசுதாஸ் அடிகளார் மற்றும் இருபால் துறவியர் அன்பியங்கள் பங்கு மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் கனக சபாபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

    Next Story
    ×