search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு
    X

    ரெயில் விபத்தில் காயமடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அருகில் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., டீன் ரத்தினவேலு உள்ளனர்.

    இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு

    • இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    • இந்த விபத்து குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர் சுப்பிரமணியன் மதுரை வந்தார்.

    மதுரை

    மதுரையில் இன்று உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா ரெயில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்து மதுரை ரெயில்வே மருத்துவ மனையிலும் மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

    இந்த விபத்து குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர் சுப்பிரமணியன் மதுரை வந்தார். அவர் தீ விபத்தில் உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் மற்றும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    இன்று காலை 5 மணி அளவில் உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்த பயணிகள் 64 பேர் திருப்பதியில் தரிசனம் செய்துவிட்டு பின்பு மதுரை வந்து மீனாட்சியம்மன் கோவில் மற்றும் ராமேசுவரம் செல்ல இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக 5 மணி அளவில் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைக்கும் போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த நபர்களுக்கும் மருத்துவ உதவிகள் செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    இறந்த நபர்களின் உடல்கள் விரைவாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப் படும். மேலும் அவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

    சி.டி.ஸ்கேன், இ.சி.ஜி. போன்ற மருத்துவ பரிசோ தனைகள் செய்யப்பட்டு ரெயிலில் வந்த பயணிகளை பத்திரமாக அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    விபத்து நடந்த தகவல் தெரிந்த உடனே அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் வந்து வேண்டிய உதவிகளை செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    Next Story
    ×