search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும்-மேயர் வேண்டுகோள்
    X

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும்-மேயர் வேண்டுகோள்

    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
    • மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை

    தமிழக முதல்-அமைச்சர் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்தார்.

    மதுரை மாநகராட்சி உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் முதற்கட்டமாக கடந்த 24-ந்தேதி தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    அதன்படி மதுரை மாநகராட்சி மண்டலம் 1-க்கு உட்பட்ட பகுதிகளில் 35 இடங்களிலும், மண்டலம் 2-க்கு உட்பட்ட பகுதிகளில் 38 இடங்களிலும், மண்டலம் 3-க்கு உட்பட்ட பகுதிகளில் 182 இடங்களிலும், மண்டலம் 4-க்கு உட்பட்ட பகுதிகளில் 188 இடங்களிலும், மண்டலம் 5-க்கு உட்பட்ட பகுதிகளில் 69 இடங்களில் என மொத்தம் 512 இடங்களில் நடைபெற்று வருகிறது.

    மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 207 நியாய விலைக்கடைகள் கணக்கெடுக்கப்பட்டு மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 94 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    மதுரை மாநகராட்சி 5 மண்டலத்திற்கு உட்பட்ட 208 பள்ளி மற்றும் கல்லூரிகள், 83 சமுதாய கூடங்கள், 4 பூங்காக்கள், 72 அரசு துறை கட்டிடங்கள், 21 வழிபாட்டு தலங்கள், 116 திருமண மண்டபங்கள், 8 தனியார் குடியிருப்பு பகுதிகள் என மொத்தம் 512 பகுதிகளில் சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த முகாம் காலை 9.30 மணி முதல் மதியம் 1 வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெறும். பொதுமக்கள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களிலும் விண்ணப்பங் களை பெற்றுக்கொள்ளும் முகாம்கள் நடைபெறும்.

    எனவே மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×