என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டிகள்
- மதுரையில் அண்ணா பிறந்த நாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
- சைக்கிள் போட்டிக்கு மானியமாக அரசு ரூ.3 ஆயிரம் ஒதுக்கீடு செய்ததை உயர்த்தி தற்போது இந்த சைக்கிள் போட்டிக்கு ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளனர்.
மதுரை
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு ஆண்டுதோறும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
அதன்படி இந்த ஆண்டு முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு கடந்த ஆண்டுகளில் சைக்கிள் போட்டிக்கு மானியமாக அரசு ரூ.3 ஆயிரம் ஒதுக்கீடு செய்ததை உயர்த்தி தற்போது இந்த சைக்கிள் போட்டிக்கு ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளனர்.
இன்று காலை அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதுரை பிரிவு சார்பில் நடந்த சைக்கிள் போட்டிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தப் போட்டி 6 பிரிவுகளாக நடந்தது. 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 20 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், 13 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் 10 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் 15 கிலோமீட்டர் தூரமும், 15 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் 15 கிலோமீட்டர் தூரமும், 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடந்தது. மதுரை ரேஸ்கோர்ஸ் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் இருந்து புதூர்,மூன்று மாவடி, கடச்சனேந்தல், கள்ளந்திரி வரை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரம், 4 முதல் 10 வரையிலான இடத்திற்கு வருபவர்களுக்கு தலா ரூ.250-த்திற்கான காசோலைகள் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன், மேயர் இந்திராணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்