search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளழகர் கோவில் ஆடி தேரோட்டம்
    X

    தேரோட்டத்தை முன்னிட்டு தயார் நிலையில் உள்ள தேரை படத்தில் காணலாம்.

    கள்ளழகர் கோவில் ஆடி தேரோட்டம்

    • கள்ளழகர் கோவில் ஆடி தேரோட்டம் நாளை நடக்கிறது.
    • முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    அலங்காநல்லூர்

    108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாள் அன்னம், சிம்மம், அனுமார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பா லித்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான ஆடித்தேரோட்டம் நாளை (1-ந் தேதி) நடக்கிறது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு சுந்தர்ராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேரில் எழுந்தருளுகிறார். அதன்பின் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    திருத்தேர் புதிய வண்ண அலங்கார திரைச்சீலை அமைத்தல், திருத்தேர் சக்கரங்கள், குதிரை உள்ளிட்டவைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி, தேர்கட்டை முட்டு தள்ளுதல் பிரேக் ஆகியவை புதுப்பித் தல் பணி மற்றும் தடுப்பு வேலிகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடை பெற்றது. மேலும் தேரோட்டத்தை பக்தர்கள் காண ஆங்காங்கே அகன்ற திரைமூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் பாதுகாப்பு வசதிக்காக கோவில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோவில் துணை ஆணையர் இராமசாமி மற்றும் உள்துறை அலு வலர்கள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து பணி களை துரிதப்படுத்தியும், பணியாளர்களுக்கு ஆலோ சனை வழங்கியும் வருகின்ற னர். ஆடி திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×