search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை நள்ளிரவில் ஆய்வு செய்த கமிஷனர்
    X

    கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை நள்ளிரவில் ஆய்வு செய்த கமிஷனர்

    • கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை நள்ளிரவில் கமிஷனர் ஆய்வு செய்தார்.
    • இப்பகுதியில் பெரும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

    மதுரை

    மதுரையில் முல்லைப் பெரியார் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் நடைபெற்று வருகிறது. அதன்படி மதுரையின் முக்கிய சாலை பகுதியாக இருக்கும் பெரியார் பஸ் நிலையம், திருப்பரங்குன்றம் சாலை பகுதிகளில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்தப் பணியால் இப்பகுதியில் பெரும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் வந்தன. அதனை போக்கும் விதமாக மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், ஆகியோர் மதுரையில் நடைபெறும் இந்த பைப் பதிக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், வேலை ஆட்கள் சுழற்சி முறையில் இரவு நேரங்களிலும் பணி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.

    அதன்படி நேற்று காலையில் பல்வேறு பகுதிகளில் மேயரும் மாநகராட்சி ஆணை யாளரும் நகர் நல பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 12 மணி அளவில் மாநகராட்சி ஆணையாளர் டி.வி.எஸ். நகர் மற்றும் திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் குழாய் பதிக்கும் பணியினை ஆய்வு செய்தார்.

    Next Story
    ×