என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாலைகளில் குப்பைகளை சிதறவிட்டு செல்லும் மாநகராட்சி லாரிகள்
- சாலைகளில் குப்பைகளை சிதறவிட்டு செல்லும் மாநகராட்சி லாரிகளால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
- சாலைகள் முழுவதும் குப்பைகள் சிதறி துர்நாற்றம் வீசுகிறது.
மதுரை
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் நாள்தோறும் 100 டன் குப்பைகளை சேகரித்து மாநகராட்சி 92-வது வார்டு பகுதியில் உள்ள வெள்ளக்கல் பகுதியில் குப்பைகள் சுத்தரிக்கும் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.
இந்த குப்பைகள் ஒவ்வொரு வார்டு பகுதியிலும் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் அந்தத் தொட்டியில் குப்பை களை கொட்டியும் மேலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து பெறப்பட்டு அதனை அந்தந்த வார்டுகளில் உள்ள குப்பைத் தொட்டிகளில் வந்து சேர்க்கின்றனர். இந்த குப்பைகளை எல்லாம் மாநகராட்சி குப்பை லாரிகள் மூலமும், டிராக்டர் மூலமும் கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு கொண்டு செல்லும் குப்பை லாரிகள், டிராக்டர்கள் ஓரிடத்தில் அள்ளிய குப்பைகளை வீதி எங்கும் சிதறவிட்டும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு குப்பைகளை காற்றில் பறக்க விட்டும் செல்கின்றன. இதனால் சாலைகள் முழுவதும் குப்பைகள் சிதறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.
இதுகுறித்து பலமுறை கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கூறியும் எந்த பலனும் இல்லாத நிலையில் தான் இருக்கிறது. மேலும் இந்த குப்பை களை கொண்டு சேர்க்கும் குப்பை லாரிகள் காண்ட்ராக்டர் மூலம் எடுத்து செல்வதால் காண்ட்ராக்டர்கள் அதிக குப்பைகளை கொண்டு சென்றால் அதிக லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அளவுக்கு அதிகமாக லாரி மற்றும் டாக்டர்களில் குப்பைகளை எடுத்துச் செல்வதினாலும் குப்பைகள் இப்படி வீதி களில் சிதறி விழுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தூய்மைப் பணிகள் மெத்தனமாக நடந்து வருகின்றன. குப்பைகள் அள்ளப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாக்கடைகள் நிரம்பி வழிகின்றன.
இது போதாதென்று சேகரிக்கும் குப்பைகளை சாலை முழுவதும் சிதறவிட்டுச் செல்கின்றன. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்