என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள்
- இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையொட்டி பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள்.
- சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.
மதுரை
இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு மதுரை மற்றும் சுற்றுவட்டார பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூடலழகர் பெருமாள் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கூடலழகர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதிகளிலும் பக்தர்கள் வரிசையில் நின்று வழிபட்டனர்.
தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி-அம்பாளை தரிசனம் செய்தனர்.
அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். இதனால் அழகர் கோவில் பகுதியில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஒத்தக்கடை யோகநரசிங்க பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலையில் இருந்தே பக்தர்கள் தொடர்ச்சியாக வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் யோகநரசிங்க பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெருமாள் சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோவில், கைத்தறிநகர் பாலாஜி வெங்கடேசுவர பெருமாள் கோவில், முனிச்சாலை பாலாஜி வெங்கடேசுவர பெருமாள் கோவில், காமராஜர் சாலை ஆஞ்சநேயர் கோவில், தெற்கு கிருஷ்ணன் கோவில் ஆகிய பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்