என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அம்மன் கோவில்களில் பக்தர்கள் திரண்டனர்
- அம்மன் கோவில்களில் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அம்மன் கோவில்கள் திருவிழா கோலமாக காட்சியளித்தன.‘
மதுரை
தமிழ் மாதங்களில் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.
பக்தர்களுக்கு கூழ் வார்த்தல், நேர்த்திக் கடன் செலுத்துதல், முளைப்பாரி திருவிழாக்கள் நடைபெறும். அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இன்று ஆடி 3-வது வெள்ளிக்கிக்கிழமையை யொட்டி மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள், குறிப்பாக பெண்கள் அதிகளவில் திரண்டு வழிபாடு செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை யிலேயே பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று அம்மனை பக்தர்கள் தரினசம் செய்தனர். தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் காட்சியளித்தார். சாதம், கூழ், பால், மோர் ஆகியவற்றை கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வழங்கினர்.
மடப்புரம் பத்திர காளியம்மன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில், ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோவில், மறவர்சாவடி தசகாளி யம்மன் கோவில், சொக்க லிங்கநகர் சந்தனமாரி யம்மன் கோவில், பி.பி.சாவடி பஸ் நிறுத்தம் காளியம்மன்-மாரியம்மன் கோவில், பழங்காநத்தம் நேருநகர் அங்காள ஈஸ்வரி கோவில், புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்கா ரங்கள் செய்யப்பட்டு பூஜை கள் தீபாராதனை நடந்தது.
அழகர்கோவில் நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனை நடந்தது.
ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதனால் அம்மன் கோவில்கள் திருவிழா கோலமாக காட்சியளித்தன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்