search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது-ஆர்.பி.உதயகுமார் பேட்டி
    X

    முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமையில் அ.ம.மு.க. நிர்வாகிகள்

    அ.தி.மு.க.வில் இணைந்தனர் அருகில் பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், மகேந்திரன், மாணிக்கம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

    விவசாயிகள் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது-ஆர்.பி.உதயகுமார் பேட்டி

    • விவசாயிகள் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது.
    • மதுரை மேற்கு ஒன்றிய அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் இன்று நடந்தது.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மேற்கு ஒன்றிய அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் இன்று நடைபெற்றது.

    மதுரை மேற்கு அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் வயலூர் எம்.சுரேஷ், அதலை ஊராட்சி செயலாளர் அன்புவேலன், வயலூர் ஊராட்சி செயலாளர் வினோத்குமார், அதலை கிளைச் செயலாளர் செல்வேந்திரன் ஆகியோர் சட்டமன்ற எதிர்க்கட்சித்துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

    பின்னர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, மேல்மா கிராமத்திலே தொழில் பூங்கா விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்களை கையப்படுத்த, அரசு முடிவு எடுத்ததன் அடிப்படையிலே, எதிர்ப்பு தெரிவித்து 124 நாட்கள் தொடர்ந்து போராடிய 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிலே 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து இதில் அருள் ஆறுமுகத்தை தவிர ஆறு பேர் மீதான குண்டர் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.

    எடப்பாடியார் இது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டார். அதனை தொடர்ந்து 24 மாவட்டங்க ளில் விவசாயிகள் தி.மு.க. அரசை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தினர்.

    போராட்டத்தில் பங்கெ டுக்கும் விவசாயிகளுடைய தீவிரத்தை குறைக்க வேண்டும் என்றும் அதனு டைய ஆர்ப்பாட்டத்தை தடுக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளிலே அந்த பகுதிகளில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மீதும், விவசாய பெருங்குடி மக்கள் மீதும் தி.மு.க. அரசு தொடர் வழக்குகளை பதிவு செய்து வருகிறது. விவசாய பெருங்குடி மக்களின் போராட்டத்தை கட்டுப் படுத்த இந்த அரசு தவறான முறைகளை கையாண்டு வருகிறது.

    திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்த போது பல அமைப்புகளை திட்டமிட்டு தூண்டிவிட்டு தவறான பொய்யான தகவல்களை எல்லாம் வெளியிட்டு அன்றைக்கு அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை எல்லாம் அரசியல் உள்நோக்கத்தோடு நடத்தப்படுகிறது என்றாலும் அந்த போராட்டங்களுக்கு அனுமதி வழங்கி காவல் துறை பாதுகாப்பு வழங்கி னார் எடப்பாடியார்.

    ஆனால் இன்றைக்கு இருக்கிற தி.மு.க. அரசு விவசாயிகளுடைய போராட்டத்திற்காக காரணத்தை கண்டறிந்து அதை தீர்ப்பதற்கான நடவ டிக்கைகளை எடுக்காமல் விவசாயிகளுடைய போராட்டங்களை எல்லாம் ஒடுக்குவதற்கு காவல் துறையை தொடர்ந்து ஏவல் துறையாக பயன்படுத்தி வருவது. இதன் மூலம் தி.மு.க. அரசு விவசாயிகள் பிரச்சினையில் இரட்டை வேடம் போடுகிறது.

    திருமங்கலம் சிவரக் கோட்டை சிப்காட் பிரச்சினையில் விவசாயிகள் உச்சநீதிமன்றம் வரை எல்லாம் போராடினார்கள். அனைத்து கட்சிகள் போரா டினாலும் கூட அதற்கு தீர்வு கண்டவர் எடப்பாடி யார். அதனால் தான் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் என்று மக்கள் பேசுகிறார்கள். காலம் மாறும் காட்சிகள் மாறும் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடியார் வருவார் அப்போது விவசாயிகளுடைய எண்ணத்தை நிறைவேற்றுகின்ற வகையில் இந்த திட்டங்களையே ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை விவசாயிகள் விரும்புகிற நடவடிக்கைகளை எடப்பாடியார் எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×