search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டப்பணிகள்-நகராட்சி தலைவர் தகவல்
    X

    நகராட்சி தலைவர் சகுந்தலா

    தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டப்பணிகள்-நகராட்சி தலைவர் தகவல்

    • தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது
    • இந்த தகவலை நகராட்சி தலைவர் சகுந்தலா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம் பட்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் பல கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    ரூ.3 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை, ரூ.1.கோடியே 50 லட்சம் மதிப்பில் வார்டுகளில் போர்வெல் அமைத்தல், ரூ.4 கோடி மதிப்பில் தார்சாலை, ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் தெருவிளக்குகள் அமைத்தல், ரூ.10 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள், சலவை தொழிலாளர்களின் வசதிக்காக 10 லட்சம் மதிப்பில் நீர்நிலை தொட்டி அமைத்தல், உசிலம்பட்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் ரூ. 8 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதி மக்கள் பொழுதுபோக்கிற்காக ரூ.30 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப் பட்டுள்ளது. உசிலம்பட்டி நகராட்சிக்கு ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் பொற்கால ஆட்சியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கி தந்த முதல்வரின் நடவடிக்கை யால் உசிலம்பட்டி பகுதி புதிய உயரத்தை தொட்டுள்ளதாக நகராட்சி தலைவர் சகுந்தலா தெரிவித்தார்.

    Next Story
    ×