search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை-ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
    X

    ஜி.கே.வாசன்

    மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை-ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

    • மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
    • பெண்களுக்கு ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிக்கையில் அறிவித்தது.

    மதுரை

    மதுரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலை வர் ஜி.கே. வாசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.

    குறிப்பாக குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.

    இதை நம்பி பெண்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் ஊக்க தொகை வழங்கவில்லை. இதனால் தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில்,கோபத்தில் உள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. ஆட்சியை இழந்தது.ஆனால் 65 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள அ.தி.மு.க. தான் பிரதான எதிர்க்கட்சியாக திகழ்ந்து வருகிறது.

    பாரதிய ஜனதா கட்சியும் மக்கள் பிரச்சினைகளுக்காக கடுமையாகப் போராடி வருகிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம்.

    அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே சிண்டு முடியும் வேலையை யாரும் செய்ய வேண்டாம். தி.மு.க. அரசின் குறைகளை எடுத்துக் கூற அந்த அணியில் உள்ள மற்ற கட்சிகள் மவுனம் காத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×