என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுரையில் நோய் தடுப்பு பணியில் சுகாதார பணியாளர்கள் தீவிரம்
- மதுரையில் நோய் தடுப்பு பணியில் சுகாதார பணியாளர்கள் தீவிரமாக நடந்து வருகிறது.
- மதுரை மாநகரம் முழுவதிலும் டெங்கு ஒழிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது” என்றார்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக தொடர் மழை செய்து வருகிறது. இதன் காரணமாக சாலை மற்றும் பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது. மாவட்டம் முழுவதிலும் டெங்கு காய்ச்சல் படிப்படியாக பரவி வருகிறது.
மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 பேர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகினர். அதில் 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை சந்தைப்பே ட்டையை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை, டெங்கு பாதிப்பால் கடந்த 19-ந் தேதி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்றிரவு பரிதாபமாக இறந்தது.
இந்த நிலையில் மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் மாநகராட்சி சார்பில் 530 பணியாளர்கள் வீடு வீடாக சென்று குடிநீர் தொட்டியில் மருந்து தெளித்தல், கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து மருந்து தெளித்தல், மற்றும் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மதுரை மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத் கூறுகையில், சிறுமி டெங்கு பாதிப்பால் தான் இறந்தது என்று உறுதியாக கூற முடியாது. அந்த குழந்தைக்கு மற்ற பாதிப்பும் இருந்தது. மதுரை மாநகரம் முழுவதிலும் டெங்கு ஒழிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது" என்றார்.
மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டு தயார் நிலையில் இருப்பதாகவும், அங்கு 2 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும், ரத்த மாதிரிகளை எடுத்து டெங்கு சோதனை செய்யும் கண்டறியும் வசதி மருத்துவமனையில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு நேற்று மட்டும் 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது குழந்தை இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்