search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உத்தங்குடி கண்மாயில் விஷம் கலந்து உள்ளதா?
    X

    உத்தங்குடி கண்மாயில் விஷம் கலந்து உள்ளதா?

    • உத்தங்குடி கண்மாயில் விஷம் கலந்து உள்ளதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    • இதனைப் பார்த்த அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரையில் உள்ள உத்தங்குடி கண்மாயில் சிறுவன் ஒருவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளிக்க சென்றான். அப்போது அவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இது தொடர்பாக போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    இந்த நிலையில் உத்தங்குடி கண்மாயில் மீன்கள் திடீரென செத்து மிதக்க ஆரம்பித்தன. இதனைப் பார்த்த அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதன் அடிப்படையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் நல்லுசாமி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் உஷாராணி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஞானம் ஆகி யோர் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்த கிடந்த மீன்கள் தொடர்பாக ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் கண்மாய் தண்ணீரை பரிசோதனைக்காக, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

    உத்தங்குடி கண்மாயில் செத்து கிடந்த மீன்கள், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்து இருக்கலாம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. இருந்தபோதிலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நீரின் பரிசோதனைக்குப் பிறகு தான், உத்தங்குடி கண்மாயில் விஷம் கலந்து உள்ளதா? அல்லது ஆக்சிஜன் குறைபாடு உள்ளதா? என்பது பற்றிய விவரங்கள் தெரியவரும். உத்தங்குடி கண்மாயில் விஷம் கலந்து இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அங்கு பொது மக்கள் குளிக்கவும், குடி தண்ணீர் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×