search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம்
    X

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம்

    • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    மதுரை

    மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மதுரை அதன் மண்டலத் துக்கு உட்பட்ட 6 மாவட்டங்களில் "நிதி உங்கள் அருகில்" குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் 27-ந்தேதி நடைபெறுகிறது.

    அதன்படி இந்த மாதம் வருகிற 27-ந்தேதி காலை 9 மணி முதல் நடைபெறுகிறது. இதுகுறித்து மதுரை மண்டல ஆணையாளர் அமியகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் பதிவுபெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப்.டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது.

    முகாமில் பங்கேற்பவர்கள் t.ly/nPTtஎன்ற இணைய தள முகவரியில் தங்கள் விவரங்களை பதிவு செய்த பின்னரே இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம்.

    மதுரை மாவட்டத்துக்கு திருமங்கலம் பி.கே.என். மேல்நிலைப் பள்ளியிலும், தேனி மாவட்டத்துக்கு கம்பம் ஸ்ரீசக்தி விநாயகா மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், சிவகங்கை மாவட்டத்துக்கு தேவகோட்டை ஆர்ச் அருகில் வீரா மருத்துவ மனையிலும், விருதுநகர் மாவட்டத்துக்கு விருதுநகர் பழைய பஸ் நிலையத்தின்பின்புறம் கே.வி.எஸ்.நடுநிலைப் பள்ளியிலும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பரமக்குடி கணபதி செட்டியார் வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல் நிலைப்பள்ளியிலும், திண்டுக்கல் மாவட்டத்துக்கு கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்திலும் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை மதுரை வருங்கால வைப்பு நிதி அலுவலக மண்டல ஆணையாளர் பி.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×