search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வின் மிகப்பெரிய சங்கமமாக மதுரை மாநாடு அமையும்-வி.வி.ஆர்.ராஜ்சத்யன் பேட்டி
    X

    இறகுப்பந்து போட்டியை மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜ்சத்யன் தலைமையில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அருகில் நிர்வாகிகள் ரமேஷ், முருகன் உள்ளனர்.

    அ.தி.மு.க.வின் மிகப்பெரிய சங்கமமாக மதுரை மாநாடு அமையும்-வி.வி.ஆர்.ராஜ்சத்யன் பேட்டி

    • அ.தி.மு.க.வின் மிகப்பெரிய சங்கமமாக மதுரை மாநாடு அமையும் என்று வி.வி.ஆர்.ராஜ்சத்யன் கூறினார்.
    • அ.தி.மு.க. சார்பில் எந்த ஒரு பெரிய சினிமா தயாரிப்பு நிறுவ னமும் கிடையாது.

    மதுரை

    மதுரை மண்டல அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நாகமலை புதுக்கோட்டையில் எடப்பாடியார் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டி நடந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 69-வது பிறந்தநாள் விழாவை யொட்டி நடந்த இந்த

    ேபாட்டிக்கு மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலாளர் வி.வி.ஆர். ராஜ்சத்யன் தலைமை தாங்கினார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கிவைத்தார்.

    இந்த போட்டியானது ஜூனியர் மற்றும் சீனியர் என 2 பிரிவில் ஆடவர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என பல உட்பிரிவுகளில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்க ளுக்கு சிறப்பு பரிசுகளும், கோப்பைகளும், மெடல்களும் வழங்கப்பட்டன.

    இதில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசுகையில், இது இளைஞர்களுக்கான போட்டியாகவும், அவர்களது திறனை வெளிப்படுத்தும் முயற்சியாகவும், மாண வர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் பல்வேறு போட்டிகள் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் நடத்தப்பட்டுள்ளது. இதை அ.தி.மு.க. மாவட்ட கழகத்தின் சார்பில் வரவேற்கிறோம்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்து அதில் பங்கேற்கும் சிறந்த வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு மதுரை தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து இருக்கின்றனர் என்றார்.

    இதனைத் தொடர்ந்து மதுரை அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பத்துறை மண்டல செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் கூறியதாவது:-

    நாட்டு நடப்புகள் எவ்வாறு வெளிவர வேண்டும் என்பதற்கு சோசியல் மீடியா மூலதனமாக இன்றைக்கு செயல்பட்டு வருகிறது. நாளைய ஆட்சியை தீர்மானிப்பது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சோசியல் மீடியாவாகத்தான் இருக்கும். மதுரையில் வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி அ.தி.மு.க. மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாநாடு ஆங்காங்கே சாதாரணமாக நடக்கிற பொதுக்கூட்டமாக இருக்காது. இது கூடி கலையும் நிகழ்வுமல்ல. அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைகிற மிகப்பெரிய சங்கமமாக இருக்கும். தி.மு.க.வில் மிகப்பெரிய சினிமா தயாரிப்பு நிறுவ னங்கள் தொடர்பு கொண்டு இயங்கி வருகிறது. அதனால் திரைத்துறையினர் தொடர்ந்து தி.மு.க.வினருக்கு ஆதரவளித்து வருகிறார்கள்.

    ஆனால் அ.தி.மு.க. சார்பில் எந்த ஒரு பெரிய சினிமா தயாரிப்பு நிறுவ னமும் கிடையாது. அதனால் திரைத்துறையினர்

    அ.தி.மு.க.வினரை கண்டு கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×